×

இந்தியாவுடன் ஒருநாள் தொடர் ஆஸி. அணியில் ஆண்ட்ரூ டை

மெல்போர்ன்: இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடர் தொடங்கும் முன்பாக, வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆஸி. வேகம் கேன் ரிச்சர்ட்சன் காயம் அடைந்தார். காயம் குணமடையாத நிலையில், அவர் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சையை தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸி. அணியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஆண்ட்ரு டை சேர்க்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Andrew Ty ,team , India, one-day series, Andrew Ty
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது